அரசு மின்துறை பணம் ரூ. 55 லட்சம் கையாடல் செய்த கேஷியர் கைது

Puducherry Government Electricity Department Rs. 55 lakh cashier arrested!

புதுச்சேரி சோனாம்பாளையத்தில் மின்துறை தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மின்துறை நிதி கட்டுப்பாட்டாளராக மோகன்குமார் பணியாற்றி வருகிறார். மின்துறையின் GSTக்கு தனி கணக்கு தொடங்கப்பட்டு, அதில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்குகளை ஆய்வு செய்த போது கடந்த 2020 ஆண்டு முதல் தற்போது வரை ரூ 55,75,000 மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து காசாளர் யோகேஷ் என்பவரிடம் கேட்ட போது அவர் சரியான பதிலை கூறவில்லை.

Puducherry Government Electricity Department Rs. 55 lakh cashier arrested!

இது குறித்து ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில், மோகன்குமார் புகார் தெரிவித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யோகேஷை கைது செய்தனர். பின்பு அவரிடம் விசாரணை நடத்திய போது GST பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி கையாடல் செய்ததாகவும், அந்த பணத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்தியதுடன், கார் மற்றும் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன் என்று பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். போலீசார் மேலும் இதுகுறித்து யோகேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Pondicherry
இதையும் படியுங்கள்
Subscribe