புதுச்சேரி பஞ்சாலைகளை பாதுகாத்து, நவீனப்படுத்தி, மீண்டும் இயக்குதல் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (05.03.2020) டெல்லி நாடாளுமன்றம் எதிரில் (ஜந்தர் மந்தர்) புதுச்சேரி அனைத்து பஞ்சாலை தொழிற்சங்கங்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Advertisment

போராட்டத்தின் போது பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டு ஒரு நூற்றாண்டை கடந்த புதுச்சேரி A.F.T மில்லை 30.04.2020 முதல் மூடுவது என அறிவிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும், எந்த வகையிலும் சுற்றுச்சூழலை பாதிக்காமல் இருந்து வரும் A.F.T மற்றும் சுதேசி, பாரதி ஆகிய 3 மில்களில் எந்தவொரு மில்லையும் மூடுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கக்கூடாது, விரும்பும் தொழிலாளர்களுக்கு V.R.S அளித்துவிட்டு எஞ்சியுள்ள தொழிலாளர்களையும் அவர்களுடன் சுதேசி, பாரதி, AFT மில்களில் 8 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தரப்படுத்தப்படாமல் சிஎல் தொழிலாளர் என்ற பெயரில் வேலை வாங்கப்பட்டு வரும் 350 தொழிலாளர்களையும் வைத்துக் கொண்டு மில்லை இயக்குவதாக புதுச்சேரி அரசு கூறுகிறது.

Advertisment

PUDUCHERRY GOVERNMENT COTTON MILLS UNION DELHI

28.01.2020 அன்று இது சம்பந்தமாக புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அமலாக்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைய காலச் சூழ்நிலைக்கு ஏற்ப AFT மில்லின் கட்டிடங்களின் சிறுசிறு பழுதுகளை நீக்கி மறுகட்டமைப்பை உருவாக்க வேண்டும். நிர்வாக செலவுகளுக்கு ரூ.300 கோடியும், தென்னாப்பிரிக்கா நாடுகளிலிருந்து கடனில் ரூ.1,000 கோடிக்கு AFT “A, B, C” ஆகிய மூன்று யூனிட்களிலும் புதிய மெஷின்களை இறக்குமதி செய்து இயக்கிட வங்கி உத்திரவாதம் அளித்திட வேண்டும், அதேபோல் சுதேசி மில்லுக்கு ரூ.200 கோடி, ஸ்ரீ பாரதி மில்லுக்கு ரூ.200 கோடியில் இரு மில்களையும் நவீனப்படுத்தி உயர்நிலைப் படுத்திட வேண்டும்.

PUDUCHERRY GOVERNMENT COTTON MILLS UNION DELHI

1980- ஆம் ஆண்டுகளிலும் அதனை தொடர்ந்து 1994- 95 ஆண்டுகளிலும் இருந்து வந்தது போல் மூன்று மில்களிலும் 15,000 தொழிலாளர்கள் நேரடியாக மில்லுக்குள் பணிபுரிந்திடவும், மத்திய, மாநில அரசுகளுக்கு மேற்படி காலக்கட்டங்களில் கிடைத்து வந்தது போல் நிரந்தரமான வருமானம் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisment

இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராஜா, காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் விசுவநாதன் மற்றும் சி.ஐ.டி.யூ தேசிய செயலாளர் கருமலையான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.