puducherry former cm narayanasamy speech

Advertisment

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் புதுச்சேரி மக்கள் இயக்கம் ஒருங்கிணைந்து நடத்திய புதுச்சேரி மாநிலத் தகுதி கோரிக்கை மாநாடு நேற்று (06/03/2021) நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாநில அந்தஸ்து வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து உரையாற்றினர்.

அப்போது பேசிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றால் மட்டுமே புதுச்சேரி மாநிலம் முழு வளர்ச்சிப் பெற முடியும். நாங்கள் சிறப்பு மாநில அந்தஸ்தை மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தோம். ஏனென்றால் 90 சதவீதம் நிதி கிடைக்கும். தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை; நியமிக்கபட்ட உறுப்பினர்களைக் கொண்டு அரசை முடக்கி உள்ளனர். அதனால் முழு அதிகாரம் பெற்ற மாநிலமாக இருந்தால் மட்டுமே மக்களுக்கான நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியும். அதனால் மாநில அந்தஸ்து வேண்டும்" என்றார்.