sp

புதுச்சேரி விமான நிலையம் லாஸ்பேட்டையில் அமைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விமான நிலையம் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் சிறிய வகை விமானங்கள் புதுச்சேரியில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்தது. பயணிகளின் வரவேற்பு குறைந்த காரணத்தால் 3 முறை விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக புதுச்சேரியில் இருந்து பெங்களூர், ஐதராபாத் நகரங்களுக்கு தனியார் (ஸ்பைஸ் ஜெட்) நிறுவனம் சார்பாக விமான சேவை தொடங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் புதிய முயற்சியாக வெளிநாட்டு விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டது.

புதுச்சேரியில் இருந்து ஐதராபாத் வழியாக தாய்லாந்து நாட்டின் தலைநகரான பேங்காங்கிற்கு தினசரி சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisment

ஸ்பைஸ்ஜெட் தனியார் நிறுவனம் இச்சேவையை புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து செய்து வருகிறது. புதுச்சேரியில் இருந்து காலை 11.45 மணிக்கு புறப்படும் விமானம் ஐதராபாத் நகருக்கு மதியம் 1.20 மணிக்கு சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் விமானம் பேங்காங் நகருக்கு இரவு 9.40 மணிக்கு சென்றடைகிறது.