puducherry employees salary issues

Advertisment

புதுச்சேரி அரசின் கூட்டுறவுத் துறை நிறுவனமான பாசிக் நிறுவனத்தில் 500- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கும் மேலாகச் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்தச் சம்பளத்தை நம்பி வாழ்ந்து வந்த இவர்களின் குடும்பங்கள் சொல்லொனா துயரத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

கரோனா பேரிடர் காலத்திலும் இவர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளத்திலிருந்து ஒரு மாதச் சம்பளம் கூட வழங்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது புதுவைஅரசு. இவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, இவர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை சம்பளத்தில் 50% உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீதம் உள்ள 50% சம்பளத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கவேண்டும், பாசிக் நிறுவனத்தில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள் சுமார் 18 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தும் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருந்து வருகிறது.

Advertisment

இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும், பாசிக் நிறுவனத்தில் லாபம் ஈட்டக்கூடிய மினரல் வாட்டர் பிரிவு, குப்பையில் உரம் தயாரிக்கும் பிரிவு, போர்வெல் பிரிவு (ரிக்) ஆகிய பிரிவுகளை உடனடியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசிக் நிறுவனத்தில் பல ஏக்கர்களில் பண்ணை அமைக்கப்பட்டது.

இந்தப் பண்ணையில் மாமரம், கொய்யா, தென்னைமரம், பலா, சப்போட்டா ஆகிய மரங்கள் இருந்து வருகின்றன. இதில் விளையக்கூடிய பொருட்கள் காய்த்து அறுவடை செய்யாமல் வீணாகியும், களவாடப்பட்டும் வருகிறது. இந்தப் பண்ணையில் விளையக்கூடிய பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் பல லட்சம் பாசிக் நிறுவனத்திற்கு வருமானம் வரும். எனவே, உடனடியாக ஏலம் விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பாசிக் நிறுவனத்தில் பயனற்ற நிலையில் இருந்துவரும் பல்வேறு வகையான பொருட்களை ஏலம் விடுவதன் மூலம் பல லட்சங்கள் நிறுவனத்திற்கு வந்து சேரும். எனவே, உடனடியாக ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், பாசிக் நிறுவனத்தில் பல்வேறு வேலைகள் தாமதமாகவும், காலம் கடத்தியும் நடைபெறுகிறது.

குறிப்பாக இந்நிறுவனத்தில் மேலாண் இயக்குனராக உள்ள சிவப்பிரகாசம் வேளாண் துறையிலும் பொறுப்பு வகித்து வருகிறார். கூடுதலாக பாசிக் நிறுவனத்தின் இயக்குனராகவும் இருந்து வருவதால், இவரால் முழுமையாக பாசிக் நிறுவன வளர்ச்சிக்கு வேலை செய்ய முடியவில்லை. எனவே, பாசிக் நிறுவனத்திற்கு தனியாக மேலாண் இயக்குனரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisment

http://onelink.to/nknapp

அதேபோல் இந்நிறுவனத்தில் மேலாளர் (நிர்வாகம்), மேலாளர் (கணக்கு), மேலாளர் (தணிக்கை பிரிவு) ஆகிய பணியிடங்கள் காலியாக இருந்து வருகின்றன. அவைகளை அரசு ஊழியர்களைக் கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

ஏ.ஐ.டி.யுசி. பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் முன்பு சமூக இடைவெளியைப் பின்பற்றி, கோரிக்கை பதாகைகள் கையிலேந்தி, கோரிக்கை முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடைபெற்றது.