Puducherry DMK candidate list released

Advertisment

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில், திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளநிலையில், 173 தொகுதிகளில் திமுகபோட்டியிட உள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என அறிவித்த நிலையில், நேற்று (12.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இந்நிலையில், புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

Advertisment

அதன்படி, உருளையன்பேட்டை - கோபால், உப்பளம் - அனிபால் கென்னடி, மங்கலம் - சண்குமரவேல், முதலியார் பேட்டை - சம்பத், வில்லியனூர் - சிவா, நெல்லித்தோப்பு - கார்த்திகேயன், ராஜ்பவன் - சிவகுமார், மண்ணாடிப்பாட்டு - கிருஷ்ணன் (எ) குமார், காலாப்பட்டு - முத்துவேல், காரைக்கால் (தெற்கு) - நாஜிம், திருப்புவனை (தனி) - முகிலன், நிரவி திருப்பட்டினம் -நாகதியாகராஜன் என அறிவிக்கப்பட்டுள்ளது.பாகூர் திமுக வேட்பாளர் மட்டும்பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.