PUDUCHERY

சென்னையில் நேற்று இரவு முதலேபல இடங்களில் கனமழை தொடர்ச்சியாகத் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தச்சூழலில் சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

இந்தநிலையில்தொடர் கனமழையின் காரணமாக, புதுச்சேரியில்நாளையும் (08/11/2021) நாளை மறுநாளும் (09/11/2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குநாளையும் நாளைமறுநாளும் (09/11/2021) ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.