Advertisment

அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பியில் சிக்கி 8 கறவை மாடுகள் உயிரிழப்பு! 

PUDUCHERRY COWS INCIDENT POLICE INESTIGATION

புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் லம்பர்ட் சரவணன் நகரைச் சேர்ந்தவர் சம்பத். இவர் 10- க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (06/01/2022) இரவு மேய்ச்சலுக்காக எட்டு கறவை மாடுகளை ஓட்டி சென்றுள்ளார். மேய்ச்சல் முடிந்து இரவு 07.00 மணியளவில் வீட்டிற்கு வரும்பொழுது, புதுச்சேரியிலிருந்து புதிதாக அமைக்கப்பட உள்ள பைபாஸ் சாலையில் முட்புதர்கள் மண்டி கிடக்கும் பகுதியில் உள்ள உயர்அழுத்த மின் கம்பிகள் தாழ்வான நிலையில் அறுந்து கிடந்துள்ளது.

Advertisment

இந்த வழியே சென்ற எட்டு கறவை மாடுகளும் உயர் மின்னழுத்த கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாடுகளின் உரிமையாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடுகளை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

Advertisment

இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் மாடுகள் இறப்பு குறித்து முதலியார்பேட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Police investigation Puducherry cows Farmers
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe