Advertisment

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு 6 ஆக உயர்வு ! - முதல்வர் நாராயணசாமி ! 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (07/04/2020) வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

Advertisment

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து ஒருவர் குணமடைந்துள்ளார். புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் பகுதியில் 3 பேரும், திருபுவனை பகுதியில் ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 4 பேரும் அரசு மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Advertisment

puducherry coronavirus strength increased cm narayanasamy

இந்த நிலையில் மாஹேயில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநில எல்லைகளான விழுப்புரம், கடலூர் மாவட்ட பகுதிகளில் அதிகளவு கரோனா தொற்று பரவி வருவதால், மக்களைக் காப்பாற்றும் வகையில் தேவைப்பட்டால் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுத உள்ளேன்.

coronavirus peoples video speech cm narayanasamy Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe