puducherry coronavirus health department

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைதாண்டியது.

Advertisment

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடுஉள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

Advertisment

புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைளை, அம்மாநில அரசு எடுத்து வருகிறது. இருப்பினும் புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (02/09/2020) காலை 10.00 மணிநிலவரப்படி, புதிதாக 397 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,157 ஆக அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் இதுவரை 9,968 பேர் குணமடைந்த நிலையில், கரோனாவால் 253 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Advertisment