puducherry coronavirus cases increase

புதுச்சேரியில் மேலும் 604 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Advertisment

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

Advertisment

குறிப்பாக, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால்,கரோனா தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும் கரோனா பரிசோதனையும் அதிகரித்துள்ளன.

புதுச்சேரியில் மேலும் 604 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 13,024 ஆக அதிகரித்துள்ளது. இதில் இதுவரை 8,080 பேர் குணமடைந்த நிலையில், கரோனாவால் 199 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.