Advertisment

"கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும்" - புதுவை அமைச்சர் பேட்டி!

puducherry college and university final year exam minister press meet

புதுச்சேரி கல்வித்துறை சார்பாக 2019- 2020 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் நடத்துவது குறித்தும், 2020-2021 ஆம் ஆண்டு கல்வி செயல் திட்டம் தொடர்பாகவும் கலந்தாய்வு கூட்டம் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள உயர்கல்வித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், கல்வித்துறை செயலர் அன்பரசு, உயர்கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி மற்றும் பல்வேறு அரசுக் கல்லூரி முதல்வர்கள் கலந்துகொண்டனர். இதில் காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்திய அரசு கல்லூரி முதல்வர்கள் காணொளி காட்சி மூலம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் அரசுத்துறை செயலாளர் அன்பரசு ஆகியோர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தனர். அப்போது அவர்கள், "பல்கலை மானியக் குழு பரிந்துரையின் பேரில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஜூலை மாதம் முதல் வாரம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்குத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தாமல், அவர்கள் கடந்த செமஸ்டர்களின் தேர்ச்சி அடிப்படையில் அடுத்த ஆண்டு வகுப்புக்குச் செல்வார்கள். ஆகஸ்டு 01- ஆம் தேதி முதல் மாணவர்கள் கல்லூரிக்கு வருவது குறித்து அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

Advertisment

university exams PRESS MEET minister kamalakannan Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe