Puducherry CM Rangasamy said that the suspended employees will be re-employed

புதுச்சேரியில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலின் போது விதிகளை மீறி பணி நியமனம் செய்யப்பட்டதாகக் கூறி பல்வேறு அரசுத்துறைகளில் உள்ள ஊழியர்கள் தேர்தல் துறையால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் பல்வேறு கட்டங்களாக தங்களது கோரிக்கையைபோராட்டங்கள் மூலம்அரசுக்கு தெரிவித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரின் 16வது நாளான நேற்று பல்வேறு துறையின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ‘பல்வேறு அரசுத்துறைகளில் தற்காலிக ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டு அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தால் அவர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வரவேற்கும் வகையில் பல்வேறு துறைகளில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சட்டப்பேரவை முன்பு கூடி முதலமைச்சர் ரங்கசாமி காரின் மீது மலர்களைத்தூவி தங்களது நன்றிகளைத்தெரிவித்தனர். இதேபோன்று சட்டப்பேரவை தலைவர் செல்வம் மற்றும் பேரவை துணைத்தலைவர் ராஜவேலு ஆகியோரின்கார்களின் மீதும்நன்றியைத்தெரிவிக்கும் வகையில் மலர்களைத்தூவி நன்றியை தெரிவித்தனர்.