புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின்கணுக்காலுக்கு கீழ் சவ்வு சேதமடைந்துள்ளதால் தொடர்ந்து நடக்கும் போது வலி இருந்து வந்தது. ஏற்கனவே மருத்துவர்கள் கொடுத்த வலி நிவாரணிகள் பயனளிக்கவில்லை. அதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர். அதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாராயணசாமிக்கு நேற்று (26.11.2019) அறுவை சிகிச்சை நடைபெற்றது.

PUDUCHERRY CM NARAYANASAMY ADMIT AT CHENNAI PRIVATE HOSPITAL

Advertisment

மூட்டு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வரும் முதலமைச்சர் நாராயணசாமி கோப்புகளை அங்கேயே பார்வையிட்டார். அவர் விரைவில் குணமடைந்து புதுச்சேரி திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்று அவர் அரசின் கோப்புகளை பார்வையிட்டு தேவையானவைகளுக்கு நடவடிக்கைகள் எடுத்தார். விரைவில் புதுச்சேரி திரும்புவேன் என்றும், தன்னை பார்க்க யாரும் சென்னை வரவேண்டாம் எனவும் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார். இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின் நாராயணசாமி புதுச்சேரி திரும்புவார் என தெரிகிறது.