Advertisment

சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்ததாக வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது!

புதுச்சேரி முத்தரையர்பாளையம் பகுதியை சேர்ந்த 15- வயது சிறுமி. இவர் கதிர்காமம் அரசு பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 16- ஆம் தேதி வீட்டில் இருந்த போது திடீரென அவரை காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் பிரியா கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Advertisment

puducherry child women incident police pocso act

விசாரணையில் சிறுமியை கடத்தி சென்றது ரெட்டியார்பாளையம் பகுதியில் பேக்கிரி கடையில் பணியாற்றி வரும் விழுப்புரம் மாவட்டம் காணை பகுதியை சேர்ந்த சதீஷ்(21) என்பது தெரியவந்தது. அதையடுத்து மேட்டுப்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் சதீசை தேடிவந்தனர். இந்நிலையில் சதீஷை சிறுமி உடன் மீட்டனர். பின்னர் அந்த சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து கடத்தல் வழக்கை போக்சோ வழக்காக மாற்றப்பட்டு சதீசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

police POCSO ACT Puducherry India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe