Skip to main content

இலவச அரிசி ஊழல் குறித்து விசாரிக்க தலைமை செயலாளருக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவு! 

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் இன்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சுவாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் மனு ஒன்றை அளித்தனர். அதில் ரேஷன் கார்டுகளில் இலவச அரிசிக்கு பதிலாக, அனைவருக்கும் வங்கியில் பணம் செலுத்தப்படும் என்று கூறிய முதல்வர் நாராயணசாமியும், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியும் கடந்த 17 மாதங்களாக இலவச அரிசிக்கு பதிலாக பணம் போடாமல் ரூ.9 கோடி அளவில் முதல்வர் நாராயணசாமி விஞ்ஞான பூர்வமான முறையில் ஊழல் செய்து உள்ளதாகவும், இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்  குறிப்பிட்டிருந்தனர்.  

PUDUCHERRY Chief Secretary to investigate the free rice scam Governor KIRANBEDI  ordersPUDUCHERRY Chief Secretary to investigate the free rice scam Governor KIRANBEDI  orders


அதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ,  செய்தியாளர்களுக்கு  நேர்காணல்  அளித்தார். அப்போது அவர், " கடந்த சில மாதங்களாக ரேஷன் கார்டுகளில் இலவச அரிசி தரம் இல்லாமல் இருந்ததால், இலவச அரிசிக்கு பதிலாக வங்கியில் பணம் போடுவதாக கூறிய, முதல்வர் நாராயணசாமி அவர்கள் கடந்த 17 மாதங்களாக இலவச அரிசிக்கு பதிலாக வங்கியில் பணம் போடவில்லை. மேலும் 17 மாதங்களாக ஒரு ரேஷன் கார்டுகளுக்கு ரூ.600 வீதம் ரூ.9 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது என்பதால் இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் மனுவை கொடுத்தோம்"  என்றார். 

PUDUCHERRY Chief Secretary to investigate the free rice scam Governor KIRANBEDI  orders


ஏற்கனவே இலவச அரிசி ரேஷன் மூலம் வழங்குவது தொடர்பாக ஆளும் அரசுக்கும், கிரண்பேடிக்கு மோதல் சூடுபிடித்துள்ள நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் புகார் மனு ஆளுநர் கிரண்பேடிக்கு துறுப்பு சீட்டாக கிடைத்துள்ளது. இதுகுறித்து உடனடியாக விசாரிக்கும்படி தலைமை செயலாளருக்கு கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பாஜகவினர் அளித்துள்ள மனுவை விசாரித்து ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க தலைமை செயலாளருக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். இவ்விவகாரம் புதுச்சேரி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது