ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில், அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் மருத்துவக் காப்பீடு திட்டமான 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை டெல்லியில் இருந்து காணொளி மூலம் தொடங்கிவைத்த பிரதமர் மோடி,உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். பிரதமரின் இந்த குற்றச்சாட்டிற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தற்பொழுது விளக்கம் அளித்துள்ளார்.
அதில், உள்ளாட்சித்தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.புதுச்சேரியில் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படாதது குறித்துபிரதமருடன்விவாதிக்கத் தயார்.ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித்தேர்தல் முறையாக நடத்தப்பட்டதா? ரங்கசாமி ஆட்சிக் காலத்தில் பாஜககூட்டணியில் இருந்தபொழுதே பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துணை நிலை ஆளுநர்கிரண்பேடி தலையீட்டால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. அதேபோல் தொகுதி வரையறை பணிகள் முடியவில்லைஎன விளக்கமளித்துள்ளார்.