Advertisment

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்பு!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 28- ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார். மேலும் முதலமைச்சர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

Advertisment

puducherry central university 28th  convocation vice president

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "புதுச்சேரி பல்கலைக்கழகம் சிறந்த கல்விச்சூழல்களை கொண்டது. மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும், பெற்றோர்களுக்கும், தங்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் பெருமை தேடித் தர வேண்டும்.

puducherry central university 28th  convocation vice president

Advertisment

நாங்கள் படிக்கும் காலத்தில் கல்வி வசதிகள் இல்லை. கடுமையான சூழ்நிலைகளுக்கிடையே இங்கு வந்துள்ளோம். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தூய்மையான பல்கலைக்கழகத்தில் இடம் பிடித்துள்ளது புதுவை பல்கலைகழகம்.

puducherry central university 28th  convocation vice president

வேளாண்மை பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளுங்கள். விவசாயம் நாட்டின் அடிப்படை கலாச்சாரம். கிராமப்புறங்களுக்கும் சென்று விவசாயிகளின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளுங்கள். சிறந்த குடிமகனாக தங்களை ஒவ்வொருவரும் வளர்த்து கொள்ளுங்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும், பெற்றோர்களுக்கும், தங்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் பெருமை தேடித் தர வேண்டும்" என்றார்.

puducherry central university 28th  convocation vice president

அதேசமயம் பல்கலை கழக கல்வி கட்டணம் 225 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குடியரசு துணைத்தலைவர் வரும் போது கருப்புக்கொடி காட்டப்போவதாக மாணவர்கள் அறிவித்திருந்தனர். அதனால் நேற்று (25/02/2020) இரவு முதல் மத்திய பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் 18 மணிநேரம் மாணவர்கள் சிறை வைக்கப்பட்டனர்.

students convocation CENTRAL UNIVERSITY Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe