புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15- ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
புதுச்சேரியில் நாளை மறுநாள் அமைச்சரவை பதவி ஏற்கும் நிலையில், தற்போது அமைச்சர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.என்.ஆர் காங்கிரஸ் சார்பில் லட்சுமிநாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திரா பிரியங்கா ஆகியோர் அமைச்சர்கள் ஆகின்றனர். அதேபோல் பாஜக சார்பில் நமச்சிவாயம், சரவணன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்க இருக்கின்றனர்.