Advertisment

புதுச்சேரியில் நாளை அமைச்சர்கள் பதவியேற்பு!

Advertisment

puducherry cabiner ministers swearing n.r.congress- bjp parties

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா நாளை (27/06/2021) பிற்பகல் 02.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்களாக பதவியேற்க உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளைச் சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

Advertisment

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சந்திரா பிரியங்கா ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். அதேபோல் பா.ஜ.க. சார்பில் நமச்சிவாயம், சாய் சரவணன் ஆகிய இரு சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்து சட்டமன்ற உறுப்பினரான ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

assembly cabinet ministers cm rangasamy Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe