Advertisment

"அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் விழாக்கள் நடத்த அனுமதி வேண்டும்"- முதல்வரிடம் பா.ஜ.க. கோரிக்கை மனு!

puducherry bjp mlas meet chief minister at office

Advertisment

புதுச்சேரியில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அனைத்து மத வழிபாட்டு விழாக்களும் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதால் புதுச்சேரியில் உள்ள வழிபாட்டுத் தலங்கள், கடைகளும் திறக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் விழாக்காலங்களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (14/07/2021) புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு அனுமதி அளிக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

Rangaswamy chief minister Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe