style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பா.ஜ.க புதுச்சேரி மாநில தலைவர் சுவாமிநாதன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது,
புதுச்சேரியில் ஆளும் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசின் நிர்வாகம் சீர்கேடு அடைந்து விட்டது. சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய மாதாந்திர உதவித்தொகை 500 ரூபாய் இதுவரை வங்கியில் செலுத்தப்படாததற்கு பயனாளிகள் பட்டியல் மத்திய அரசுக்கு மாநில அரசு வழங்காததுதான் காரணம்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
மேற்கு வங்கத்தில் சிபிஐ-ன் செயல்பாடு இருக்கக்கூடாது என்றும், அதே சமயம் தமிழகத்தில் கொடநாடு கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் சிபிஐ விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறார்.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், புதுச்சேரி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் வரும் 13- ஆம் தேதியன்று பாஜக சார்பில் மருத்துவமனை முற்றுகை போராட்டம் நடைபெறும்.