Advertisment

'30ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர்'-'புதுச்சேரி சபாநாயகர் அறிவிப்பு!

Puducherry Assembly session will be held till 30th'-Speaker Selvam announced!

புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு மத்திய அரசு காலதாமதமாக அனுமதி அளித்த நிலையில் 2022 - 2023 நிதி ஆண்டுக்காக ரூபாய் 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

Advertisment

இந்நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறும் என புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பேரவைத் தலைவர் செல்வம், "2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்திருக்கிறார். இதனை அடுத்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வருகின்ற 30-ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

Advertisment

மேலும் அவர் கூறும்போது, "நாளை( 23-ஆம் தேதி) கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், அதனைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதமும் நடைபெறும். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்வி பதிலும், மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும் நடைபெறும் என்றார்.

Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe