சீனாவில் உருவானதாக கூறப்படும் கரோனா வைரஸ், படிப்படியாக உலகம் முழுவதும் பரவி மனித சமூகத்திற்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் முடங்கிப்போயிருந்த அரசு இயந்திரமும், மனித இயல்பு வாழ்க்கையும், ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து படிப்படியாக திரும்பி வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முனிசாமி சட்டப்பேரவை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளராக பணியாற்றிய வின்சென்ட் ஒய்வு பெற்றதை அடுத்து முனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.