புதுச்சேரி சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று (26/05/2021) காலை 09.30 மணிக்குப் பதவியேற்க உள்ளனர். சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணனுக்கு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட 30 சட்டப்பேரவை உறுப்பினர்களும் மூன்று நியமன உறுப்பினர்களும் பதவியேற்கின்றனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் தற்காலிக சபாநாயகர் பதவியேற்பும், சபாநாயகர் அறையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பும் நடக்கிறது.