Advertisment

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! - தேமுதிக அதிரடி!

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில், புதுச்சேரியில் பிரதான கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், உள்ளிட்ட கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் 16பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வெளியிட்டார். அதன்படி, மண்ணாடிப்பட்டு- மணிகண்டன், திருபுவனை (தனி)- விநாயகமூர்த்தி, மங்களம்- பச்சையப்பன், வில்லியனூர்- பாசில், உழவர்கரை- ழில்பேர், கதிர்காமம்- மோட்சராஜன், காமராஜ் நகர்- நடராஜன், முத்தியால்பேட்டை- அருணகிரி, உருளையன்பேட்டை- கதிரேசன், நெல்லித்தோப்பு- பூவராகவன், அரியாங்குப்பம்- லூர்துசாமி, மணவெளி- திருநாவுக்கரசு, நெட்டப்பாக்கம்- முருகவேல், காரைக்கால் (வடக்கு)- வேலுசுச்சாமி, காரைக்கால் (தெற்கு)- ஜெகதீசன், நிரவிதிருபட்டினம்- அருள்ராஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Advertisment

Assembly election Puducherry Dmdk vijayakanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe