Advertisment

புதுச்சேரியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

puducherry assembly election ammk candidates list

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் வேட்பு மனுத்தாக்கல் இன்று (12/03/2021) காலை தொடங்கியது. இருப்பினும் புதுச்சேரியில் பிரதான கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தற்போதுவரை வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் 9 பேர் கொண்ட வேட்பாளர்பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டார். அதன்படி, மண்ணாடிப்பட்டு- தனவேலு, ஊசுடு- முத்தாலு வெங்கடேசன், தட்டஞ்சாவடி- விமலா ஸ்ரீ, காமராஜ் நகர்- முனுசாமி, உப்பளம்- பாஸ்கர், நெட்டப்பாக்கம்- செல்வம், பர்கூர்- வேல்முருகன், நெடுங்காடு (தனி)- ராஜேந்திரன், திருநள்ளாறு- தர்பாரண்யம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Advertisment

TTV Dhinakaran AMMK PARTY Puducherry Assembly election
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe