புதுச்சேரிக்கு புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக ராஜீவ் வர்மா பணியாற்றி வந்தார். இந்நிலையில் ராஜீவ் வர்மா சண்டிகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றும் சரத் சவுகான் புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலாளராகநியமனம் செய்யப்பட்டுள்ளார்.