Puducherry AIADMK State Secretary Anbazhagan arrested suddenly

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தஅதிமுகவின்எடப்பாடி அணியைச் சேர்ந்த மாநிலச் செயலாளர் அன்பழகனைபுதுச்சேரிபோலீசார் அதிகாலையில் கைது செய்துள்ளனர்.

Advertisment

புதுச்சேரியில்அரசு நிர்வாகம் நடத்துவது தொடர்பாக பல்வேறு சிக்கல்கள், தடங்கல்கள் இருப்பதால் தங்களுக்குமாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும், ஆனால், மத்திய அரசுஇதற்கு எந்தவிதநடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் முதல்வர் ரங்கசாமிசமீபத்தில் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி அதிமுகவின்எடப்பாடி அணியைச் சேர்ந்த மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று ஒரு நாள் கடையடைப்புப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இந்தப் போராட்டத்திற்கு அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற நிர்வாகிகள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும், பண்டிகைக்காலம் என்பதால் இந்த கடையடைப்பை தள்ளி வைக்குமாறுதிமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்சார்பாக கோரப்பட்டது. ஆனால், மாநிலச் செயலாளர் அன்பழகன் திட்டமிட்டபடி கடையடைப்பு நடக்கும் என அறிவித்திருந்தார்.

இதனையடுத்துதிமுக சார்பில் புதுச்சேரியில்முழு அடைப்பு நடத்தக்கூடாது என டிஜிபியிடம் மனு அளித்த நிலையில் புதுச்சேரிபோலீசார்முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகஇன்று அதிகாலை அன்பழகனைகைது செய்துள்ளனர். மேலும், புதுச்சேரியில்வழக்கம்போலபேருந்துகள், கடைகள் செயல்பட்டு வருகின்றன.