Advertisment

புதுச்சேரியில் மேலும் 452 பேருக்கு கரோனா!

puducherry 452 new positive coronavirus cases

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisment

குறிப்பாக கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா மருத்துவ பரிசோதனை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. இன்று (10/09/2020) காலை 11.00 மணி நிலவரப்படி, புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 452 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,536 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 13,389 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 353 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற 4,794 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த தகவலை அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

peoples coronavirus Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe