புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் வசிக்கும் மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதையும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் காவல் ஆய்வாளர் உள்பட 21 போலீசாரும் பணிக்கு வர வேண்டாம் என்றும், தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு புதுச்சேரி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

PUDUCHERRY 21 POLICE GOVERNMENT  ORDER CORONAVIRUS PREVENTION

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.புதுச்சேரியில் கரோனா வைரஸால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment