Skip to main content

'புதுச்சேரியிலும் 10- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து'- அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

puducherry 10th public exam minister kamalakannan


தமிழகத்தில் 10- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வும், நிலுவையில் உள்ள 11- ஆம் வகுப்புத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல் சூழலைப் பொறுத்து நிலுவையில் உள்ள 12- ஆம் வகுப்புத் தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். 
 


இந்த நிலையில் புதுச்சேரியிலும் 10- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். தற்போது வரை தெலங்கானா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகள் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் 'ஆல் பாஸ்' என்று அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

 

சார்ந்த செய்திகள்