Advertisment

கோவில் தனியறையில் இருந்த ஜோடியை செருப்பால் அடித்த பொதுமக்கள்!

The public who kicked the couple in the temple private room

கோவிலில் உள்ள தனியறையில் ஜோடியாக தனிமையில் இருந்த இருவரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் செருப்பால் அடித்து தாக்கினர். ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் த்கங்கோரில் உள்ள சர்னேஷ்வர் மகாதேவ் கோயில் பூசாரி ஒருவர் கோயில் வளாகத்தில் உள்ள தனியறையில் பெண் ஒருவருடன் இருந்ததை பார்த்த பக்தர்கள், இருவரையும் வெளியே இழுத்து போட்டு செருப்பால் அடித்து தாக்கினர். மேலும் பூசாரி உடன் இருந்த பெண்ணின் ஆடைகளை கிழித்தும் அவரை கிழே தள்ளியும் தாக்கினர்.

Advertisment

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தாக்குதலுக்கு ஆளான பெண் காவல்துறையிடம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். எஸ்.பி, ராஜேந்திர பிரசாத்திடம் கொடுத்த புகாரில், ‘என்னுடைய நற்பெயரை களங்கப்படுத்தவே என்னை தாக்கியது மட்டுமின்றி, ஆடையை கிழித்தும் அவமானமப்படுத்தி உள்ளனர். பூசாரி குடும்பத்தினருடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. சம்பவ நாளில் பூசாரியின் மனைவி வருவதற்காக தான் காத்திருந்தோம். ஆனால் சிலர் எங்களை தவறாக புரிந்து கொண்டு எங்களை தாக்கினர். அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். எனது கணவர் சமூகத்தில் உயர்ந்த வேலையில் இருக்கிறார். இந்த சம்பவத்தால் எங்கள் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த தாக்குதலில் 7 பேர் ஈடுபட்டனர்’ என்று தெரிவித்தனர். மேற்கண்ட புகாரை பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் சென்று காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

Advertisment

incident Rajasthan temple
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe