ADVERTISEMENT

அதிகரிக்கும் கரோனா - பொதுபோக்குவரத்தை இரத்து செய்த மாநிலம்!

12:22 PM Mar 18, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூரில் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலிலும், இந்தூரிலும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தின் நான்கு மெட்ரோ நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட்டில் 31ஆம் தேதி வரை ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அங்குள்ள உயிரியல் பூங்கா, தோட்டங்கள் ஆகியவற்றை மறுஉத்தரவு வரும்வரை மூட மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் குஜராத்தில், மூன்று மாதங்களுக்குப் பிறகு நேற்று (17.03.2021) ஓரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அகமதாபாத் நகரில் பொதுப்போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு திரையரங்குகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT