உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 60 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் இதுவரை நான்குகட்ட ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கை அறிவித்துள்ளது. ஜூன் 30 தேதி வரை தடை செய்யப்பட்ட இடங்களில் பொதுமுடக்கத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அன் லாக் 1.0 என்ற பெயரில் பல புதிய அறிவிப்புக்களை மத்தியஅரசு தற்போது அறிவித்துள்ளது.
அதில், நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புகளில்முதல் தளர்வாக ஜூன் 8ம் தேதி முதல் வழிபாட்டு தளங்கள் மற்றும் ஹோட்டல்களை திறக்கலாம் என்றுமத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டாவது தளர்வாக பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதை பற்றி ஜூலை மாதத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தப்பட்டுள்ளது. மூன்றாவதாக மெட்ரோ ரயில், ஜிம், பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்று முடிவு செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட எப்போதும் போல் தடை தொடரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.