பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்.... ஸ்மார்ட் போன் உபயோகிப்போருக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை...

தொடர்ந்து பப்ஜி விளையாடியதால் 19 வயது இளைஞர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிகழ்வு ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

pubg player paralysed

கடந்த 26ம் தேதி ஹைதராபாத்தில் 19 வயது இளைஞர் திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அந்த இளைஞரின் வலது காலும்,கையும் செயல்படாமல் போயுள்ளது. உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ஏற்பட்ட ரத்தத் தடையால் பக்கவாதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த இளைஞரின் விரிவான மருத்துவ அறிக்கை மூலம், அந்த இளைஞர் தொடர்ந்து பப்ஜி விளையாடியதே உடல்நலக்குறைவுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

உடல்நிலையில் கவனம் கொள்ளாமல் தொடர்ந்து நீண்ட நேரம் ஆன்லைன் விளையாட்டுகளில் தொடர்ந்து மூழ்குவதே இந்த மாதிரியான பிரச்னைகளுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பெற்றோர் தங்களின் குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கண்காணித்து, அவர்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

hyderabad pubg
இதையும் படியுங்கள்
Subscribe