மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று டெல்லியில் சந்தித்தார்.
48ஆவது ஜி.எஸ்.டி. கூட்டத்தை மதுரையில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான தேதியை இறுதி செய்வது குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விலைவாசி உயர்வு தொடர்பாக நிர்மலா சீதாராமன் மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மாறிமாறி குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்தச் சந்திப்பானது நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.