ADVERTISEMENT

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட்!

03:26 PM Nov 07, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இ.ஓ.எஸ்.-01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் (PSLV-C 49).

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி 49 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

கரோனா பாதிப்புக்கிடையே இந்தாண்டின் முதல் ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி.-சி 49ஐ ஏவியது இஸ்ரோ. அனைத்து சூழ்நிலைகளிலும் படங்களை எடுக்கும் சின்தடிக் அபர்ச்சர் ரேடார் தொழில்நுட்பம் இ.ஓ.எஸ். 01-ல் உள்ளது. வணிக ரீதியாக 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் சுமந்து சென்றது பி.எஸ்.எல்.வி.-சி 49.

அமெரிக்கா, லக்ஷம்பர்க்கை சேர்ந்த தலா 4, லூதியானாவின் ஒரு செயற்கைக்கோளையும் விண்ணில் ஏவியது இஸ்ரோ.பி.எஸ்.எல்.வி. வரிசையில் 51- வது ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி- சி 49 ராக்கெட்டை விண்ணில் ஏவியது இஸ்ரோ என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT