PSLV C-59 took off

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வடிவமைத்துள்ள ப்ரோபா-3 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் தற்போது விண்ணில் பாய்ந்துள்ளது. இதற்கான கவுண்டன் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இரண்டு செயற்கைக்கோள்களுடன் தற்போது ராக்கெட் விண்ணில் பாய்ந்துள்ளது.

200 கிலோ எடை கொண்ட ஒரு செயற்கைக்கோள் சூரியனின் நிழலை மறைக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது. 340 கிலோ எடைகொண்ட கரோனாகிராப் என்ற மற்றொரு செயற்கைக்கோள் தொலைநோக்கியாக செயல்பட்டு சூரியனின் ஒளிவட்ட பாதையை ஆய்வு செய்ய இருக்கிறது. தற்போது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது. முன்னதாக நேற்றே பிஎஸ்எல்வி சி-59 விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்பகோளாறு காரணமாகதள்ளிவைக்கப்பட்டு இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 61 வது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.