PSLV C-51 launched into the sky

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் தற்பொழுது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தற்பொழுது விண்ணில் ஏவப்பட்டுள்ள பிஎஸ்எல்வி சி-51 -ல்உள்ளசேட் செயற்கைக்கோளில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. அதேபோல் பகவத்கீதையின் வாசகம் இடம்பெற்றுள்ளது.அதேபோல் இந்த ராக்கெட்டில் அமேசான் காட்டைகுறித்துஆராய்வது தொடர்பான 'அமேசானியா-1' என்ற பிரேசில் செயற்கைகோள், பாதுகாப்பு படையினர் பயன்பாட்டுக்காக இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா என்ற செயற்கைக்கோள், அமெரிக்காவின் 13 நானோசெயற்கைக்கோள்கள்இடம்பெற்றுள்ளன. ராக்கெட்டின் முதல் கட்ட செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதாகஇஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

637 கிலோ எடை கொண்ட பிரேசிலின் அமேசானியா-1செயற்கைகோளின் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் ஆகும். அதேபோல் இந்த ராக்கெட்டில் சென்னை, கோவை கல்லூரி மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.