Advertisment

டெல்லி ஜாமியா மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை... 10 பேர் கைது! 

டிசம்பர் 15 ஆம் தேதிகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, டெல்லி மதுரா சாலையில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisment

 protest of Delhi Jamia students ... 10 arrested

அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த மோதலால் 6 காவலர்கள் மற்றும் 35 க்கும் மேற்பட்ட மாணவர்களும் காயமடைந்தனர். இருப்பினும் மாணவர்கள் அங்கு விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

Advertisment

மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் இந்த வன்முறை தொடர்பாக ரவுடிகள் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக வளாகம் வெளியே நடந்த வன்முறை தொடர்பாக மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

citizenship amendment bill protest student
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe