அருணாச்சலப்பிரதேசத்தில் குடியுரிமை வழங்குவது தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டத்தில் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/apdcm-std.jpg)
அருணாசல பிரதேசத்தின் நம்சாய், சாங்லாங் மாவட்டங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் 6 பிரிவுகளை சேர்ந்த வெளிநபர்களுக்கு நிரந்தர குடியுரிமை சான்று வழங்க, உயர்மட்டக்குழு ஒன்று அம்மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22 ஆம் தேதி முதல் தலைநகர் இடாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போராட்டமும், வன்முறையும் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த இப்போராட்டத்தில் அம்மாநில துணை முதல்வரின் வீடு எரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதல்வர் வீட்டிலும் கல் வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதனை அடுத்து அங்கிருந்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் பலியாகியுள்ளனர்.
இதில் பலியான இருவரின் உடலை அங்குள்ள பூங்காவில் வைத்து போராட்டக்காரர்கள் போராடி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் சரியான முடிவு எட்டப்படும் வரையில் அவர்கள் உடலை எடுக்கப்போவதில்லை என அறிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us