உத்திரப்பிரதேசத்தில்உள்ள பாடாவ்ன் மாவட்டத்தில் கெடி சௌக் ஏரியாவில் அமைக்கப்பட்டிருக்கும் அம்பேத்கர் சிலைக்கு இரும்பினால் செய்யப்பட்ட கேட்போடப்பட்டு அதற்கு காவலர் ஒருவரும்பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

Defense of Ambedkar statue

தற்போது அந்தப் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி வீரேந்திர சிங் யாதவ் கூறியது :

நாளை அம்பேத்கர் ஜெயந்தி என்பதால் ஒரு சில சமூக விரோதிகள் சிலையைஉடைத்து சேதப்படுத்தக்கூடும். அதனால் 24 மணி நேரமும் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கு முன் சென்ற வாரம் இதே மாவட்டத்தில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் வைத்த அம்பேத்கர் சிலைக்கு காவி நிறம் பூசியது பெரும் சர்ச்சையானது. அதற்கு பிறகு நீல நிறம்பூசப்பட்டது.