Skip to main content

கால்நடை மருத்துவரை எரித்துக் கொன்ற 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

Published on 06/12/2019 | Edited on 06/12/2019

கடந்த 27ஆம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பிரியங்கா(26), பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

priyanka reddy case issue-Criminals shot dead in encounter



இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வந்தநிலையில், இன்று அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
2 raiders passed away in encounter

காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (35). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நேற்று (26-12-23) காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து நடந்து சென்ற போது ஓட ஓட விரட்டி, வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளான ரகு மற்றும் ஹசன் இந்த கொலையில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தெரியவந்தது. அதனை தொடர்ந்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில், பிரபாகரனை கொலை செய்த ரகு மற்றும் ஹசன் ஆகியோர் காஞ்சிபுரம் ரெயில் நிலையம் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் பதுங்கி இருந்த ரவுடிகளை சுற்றி வளைத்தனர். 

அப்போது, ரகு மற்றும் ஹசன் ஆகியோர் போலீசார் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தி அந்த இடத்தை விட்டு தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து, காவல்துறையினர் ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ரவுடிகளான ரகு மற்றும் ஹசன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ரவுடிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் மீட்கப்ப்ட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

என்கவுண்டர் நடந்த இடத்தில் நாட்டு துப்பாக்கி, பெட்ரோல் குண்டு பறிமுதல்

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

A country gun and petrol bomb were seized from the place of encounter

 

திருச்சியில் என்கவுண்டர் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி வருகிறார்.

 

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன். ரவுடி கொம்பன் ஜெகன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்படி திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே இருந்த ரவுடி கொம்பன் ஜெகனை போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது ரவுடி கொம்பன் ஜெகன் போலீசாரை தாக்க முயன்றுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீசார் ரவுடி கொம்பன் ஜெகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

 

add

 

காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கிவிட்டு ரவுடி கொம்பன் ஜெகன் தப்ப முயன்ற போது போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் சம்பவத்தில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் வினோத் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். பல்வேறு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ரவுடி கொம்பன் ஜெகன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் திருச்சி மக்கள் மத்தியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், என்கவுண்டர் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண், மாவட்ட காவல்துறை துணை தலைவர் பகலவன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மோப்ப நாய்களும் கொண்டு வரப்பட்டது. நடத்தப்பட்ட ஆய்வில் அந்த இடத்தில் ரவுடி ஜகன் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டு, அரிவாள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.