ADVERTISEMENT

"பேருந்தில் பா.ஜ.க. பேனர்களை வைத்துக்கொள்ளுங்கள்" - பிரியங்கா காந்தி கோரிக்கை...

12:02 PM May 20, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்திய நிலையில், பிரியங்கா காந்தி பேருந்துகளை விடுவித்து தொழிலாளர்களுக்கு உதவ பா.ஜ.க.வைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


உத்தரபிரதேசம் மாநிலத்தில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்து தருவதாக அண்மையில் காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. ஆனால், அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு காங்கிரஸ் கட்சியின் இந்தத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளாமல் அரசியல் செய்வதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். இதனையடுத்து காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகளின் விவரங்களைத் தருமாறு அரசு கேட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்ப்பில் பேருந்துகளின் விவரங்கள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டு அரசிடம் கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்தப் பட்டியலில் ஆட்டோக்கள், கார்கள், இருசக்கர வாகனங்களின் பதிவு எண்களை காங்கிரஸ் கட்சி அளித்ததாக உ.பி. அரசு பிரியங்கா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் சந்தீப் சிங் மற்றும் உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லாலு ஆகியோர் மீது வழக்குப் பதிந்தது. இந்தச் சூழலில், நேற்று காங்கிரஸ் ஏற்பாடு செய்த பேருந்துகள் தொழிலாளர்களுடன் வேறு மாநிலங்களுக்குக் கிளம்பிய நிலையில், மாநில எல்லையில் பேருந்துகளை உ.பி. போலீஸார் தடுத்து நிறுத்தினர்.


இதனையடுத்து பா.ஜ.க. அரசு வேண்டுமென்றே இந்த விஷயத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பரியங்கா காந்தி, "பேருந்தில் பா.ஜ.க. பேனர்களை வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள்., ஆனால் எங்கள் சேவைகளைத் தடுக்காதீர்கள் இந்த அரசியலினால் 3 நாட்கள் விரயம் செய்யப்பட்டு விட்டன. பல தொழிலாளர்கள் தங்கள் உயிர்களை விட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT