Advertisment

பிரியங்கா காந்திக்கு கரோனா தொற்று உறுதி

Priyanka Gandhi tested positive for corona

Advertisment

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கரோனா பரவல் தற்போது மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கரோனா பரவல் உச்சத்தில் இருந்த சமயத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்திற்கும் மேலாக பதிவாகி வந்த நிலையில், இன்றைய பாதிப்பு எண்ணிக்கை 3,712ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்திக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவரும் அவரது தாயாருமான சோனியா காந்திக்கு நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது பிரியங்கா காந்திக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, லேசான அறிகுறிகளுடன் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னோடு தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe