மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வழக்கமாக அவர் போட்டியிடும் அமேதியிலும், கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இன்று வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வயநாடு தொகுதியில் உள்ள மனன்தவாடே நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியது.
“கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு பெரும்பான்மை ஆதரவளித்து ஆட்சியில் அமரவைத்தனர். ஆனால், பெரும்பான்மையாக தேர்வு செய்து ஆட்சி செய்ய வாய்ப்பளித்த வாக்காளர்களுக்கு பாஜக துரோகம் செய்துவிட்டது.
பாஜக கடந்த 5 ஆண்டுகளாக நாட்டை துண்டுபோடும் செயலில் இறங்கி இருக்கிறது. என்னைப் பொருத்தவரை இது என்னுடைய தேசம், இந்த மலைகள் என்னுடைய தேசம்தான், உத்தரப்பிரதேசத்தில் உள்ள வயல்கள் என்னுடைய தேசம்தான், தமிழகம் என்னுடைய தேசம், குஜராத்தும் என்னுடைய தேசம், வடகிழக்கு மாநிலங்களும் என்னுடைய தேசம்” என்று கூறினார்.