Advertisment

ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம்; “மோடி பேச்சை எப்படி நம்புவது?” - விளாசும் பிரியங்கா

; Priyanka Gandhi slams PM Modi on Revanna Video Affair

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26ஆம் தேதி 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

Advertisment

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Advertisment

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஜ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Priyanka Gandhi slams PM Modi on Revanna Video Affair

இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கர்நாடகா மாநிலம், கல்புர்கி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று (29-04-24) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதில் பேசிய பிரியங்கா காந்தி, “அவர்கள் 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளனர். ஒரு சாதனையை கூட அவர்கள் செய்யவில்லை. அதனால் அவர்களின் சாதனைகளை பற்றி பேச அவர்களுக்கு தைரியம் இல்லை.

எத்தனை வேலைகள் கொடுத்திருக்கிறார்கள், எத்தனை பேருக்கு கல்வி கொடுத்திருக்கிறார்கள், எத்தனை கல்வி நிறுவனங்களைத் திறந்திருக்கிறார்கள்?. இப்போதெல்லாம் என் சகோதரிகள், உங்கள் 'மங்களசூத்திரம்', உங்கள் ஆபரணங்கள் பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நமது வீரர்கள் மீது அட்டூழியங்கள் நடந்தபோதும், ஹத்ராஸ் மற்றும் உன்னாவ்வில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோதும், அவர்கள் எரிக்கப்பட்டபோதும் மோடி எங்கிருந்தார் என்று எனக்குத் தெரிய வேண்டும். அல்லது மோடியின் அரசாங்கம் அந்தக் குற்றவாளிகளைப் பாதுகாத்ததா?.

தற்போது கர்நாடகாவில் ஒரு முக்கிய பிரச்சினை எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான நிலையில், மா.ஜ.க வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஆதரவாக மோடியும், அமித்ஷாவும் மேடை ஏறி பிரச்சாரம் செய்தனர். ரேவண்ணா ஆயிரக்கணக்கான பெண்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைப் பற்றி மோடி என்ன சொல்கிறார் என்று நான் கேட்க விரும்புகிறேன்?. நமது உள்துறை அமைச்சர் இதைப் பற்றி என்ன சொல்கிறார்? இந்த விவகாரம் குறித்து அவர்கள் மெளனம் சாதிப்பது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர்கள் எங்கு சென்றாலும் கண்டு பிடிக்கிறார்கள். ஆனால் இது இந்த வகையான குற்றவாளி, இந்த வகையான அரக்கன் நாடு முழுவதும் சுற்றித் திரிகிறார். அவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட கூற்றை எப்படி நம்புவது?” என்று பேசினார்.

இதனிடையே, ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரஜ்வால் ரேவண்ணாவை மா.ஜ.க கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

modi devegowda karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe