Advertisment

பிரியங்காவை இந்திய மக்களிடம் ஒப்படைக்கிறோம்: பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் - டிவிட்டரில் வதேரா...

priyanka gandhi

உத்தரபிரதேச கிழக்கு மண்டல காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரியங்கா காந்தி. பதவி ஏற்ற பின்னர் நேற்று முதல்முறையாக உத்தரபிரதேச மாநிலத்தில் தனது சகோதரரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தியுடன் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

Advertisment

காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் வழிநெடுக சாலையின் இருபக்கமும் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது வாகனத்தின் மீது மலர்கள் தூவியும், மாலைகளை வீசியும் வரவேற்றனர்.

Advertisment

priyanka gandhi Robert Vadra

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் பிரியங்கா காந்தியின் கணவர் வதேரா, ''உத்தரபிரதேசத்தில் புதிய பயணத்தை தொடங்கும் உனக்கு எனது வாழ்த்துகள். நீ எனது சிறந்த தோழி, எனது நிறைவான மனைவி, நம் குழந்தைகளின் மிகச்சிறந்த தாய். இப்போது பழிவாங்குதல் மற்றும் சூழ்ச்சி நிறைந்த அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. ஆனாலும் அவர் மக்களுக்கு சேவை செய்வது அவரது கடமை என்பது எனக்கு தெரியும். எனவே இப்போது அவரை இந்திய மக்களிடம் ஒப்படைக்கிறோம். தயவு செய்து அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்'' என வதேரா கூறியுள்ளார்.

congress husband robert vadra priyanka gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe