காங்கிரஸ் கட்சியையும், அதில் தொடர்ந்து வரும் வாரிசு அரசியல் குறித்தும் பிரதமர் மோடி தனது இணையதள பக்கத்தில் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரியங்கா காந்தி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ஊடகம் உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து முக்கியமான அமைப்புகள் மீதும் பாஜகவும், பிரதமர் மோடியும் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியுள்ளனர். மக்களை முட்டாள்கள் என நினைத்து பேசுவதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும். நடப்பது அனைத்தையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்” என கூறினார். பிரியங்கா காந்தி தற்போது உத்தரப்பிரதேசத்தில் "கங்கா யாத்ரா" என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.